4 லட்சம் ஏக்கராக பாசன பரப்பு அதிகரிப்பு

திருப்பூரில் தொடரும் சாரல் மழைதிருப்பூர், ஆக.6: திருப்பூரில் நேற்று காலை முதல் மாலை வரை இடைவிடாது சாரல் மழை பெய்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்பு ஏற்பட்டது.திருப்பூரில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் திருப்பூரில் நேற்று காலை முதல் மாலை 6 மணி வரை இடைவிடாது சாரல் மழை தொடர்ந்து பெய்தது. இந்த சாரல் மழை காரணமாக பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாயினர். இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்ட்டது. குறிப்பாக, மாலையில் பள்ளி விடப்பட்டு வீடு திரும்பிய மாணவ-மாணவிகள் மழையில் நனைந்தபடியே சென்றனர். பல இடங்களில் சாலைகளில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றதால், அதை கடந்து செல்ல முடியாமல் மாணவ-மாணவிகள் சிரமப்பட்டனர். பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவியர் பஸ் நிறுத்தங்களில் நிழற்குடை இல்லாததால், ஒதுங்கக்கூட இடமின்றி, மழையில் நனைந்தபடி பஸ்சுக்காக காத்திருந்து பெரிதும் அவதிப்பட்டனர்.

Related Stories: