திருப்பூரில் 3 பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ்

திருப்பூர், ஆக.6: திருப்பூரில் 3 பள்ளிகளில் அமைக்கப்பட்டிருந்த ‘ஸ்மார்ட் கிளாஸ்’ வகுப்பறையை எம்எல்ஏ செல்வராஜ் திறந்து வைத்தார்.திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ மேம்பாட்டு நிதியில் இருந்து, பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, முடிவடைந்த பணிகளை பயன்பாட்டிற்காக ஒப்படைக்கும் நிகழ்ச்சி எம்எல்ஏ செல்வராஜ் தலைமையில் நேற்று நடந்தது. இதில், ரூ.14 லட்சம் மதிப்பில் தென்னம்பாளையம் அங்கன்வாடி மையம், ரூ.3.60 லட்சம் மதிப்பில் பூலவாரி சுகுமார் பள்ளிக்கு புதிய பெஞ்ச், டெஸ்க், தலா ரூ.2 லட்சம் மதிப்பில் செரங்காடு பள்ளி, அரண்மனைபுதூர் பள்ளி, போயர் காலனி பள்ளிகளுக்கு ‘ஸ்மார்ட் கிளாஸ்’ உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டது. இதையடுத்து, இதனை திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ செல்வராஜ் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்பிரமணியம், மண்டல தலைவர் கோவிந்தசாமி, திமுக தெற்கு மாநகர பொறுப்பாளர் டி.கே.டி.நாகராசன், பகுதி செயலாளர்கள் மேங்கோ பழனிசாமி, மு.க.உசேன், மத்திய மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் ஈஸ்வரமூர்த்தி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் எம்.எஸ்.ஆர்.ராஜ், நிர்வாகிகள் சிவபாலன், திலக்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: