தூய்மை பணியாளர்களுக்கு மனநல ஆலோசனை முகாம்

ஊட்டி, ஆக.6:   ஊட்டி நகராட்சியில் 340க்கும் மேற்பட்டோர் நிரந்தரம் மற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர். தூய்மை பணியாளர்களுக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு சிகிச்சை அளிப்பது வழக்கம். இதன் ஒரு பகுதியாக, ஊட்டி நகராட்சி ஆணையர் காந்திராஜன் உத்தரவின் பேரில் நகர்நல அலுவலர் ஸ்ரீதர் ஏற்பாட்டில் தூய்மை பணியாளர்களுக்கான மனநல ஆலோசனை முகாம் நகராட்சி கூட்ட அரங்கில் நடந்தது.  மனநல மருத்துவர் ரமேஷ், பூர்ணசந்திரன் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர். நகரத்தை தூய்மையாக வைத்து கொள்வதில் தூய்மை பணியாளர்களின் பங்கு அதிகம். அவர்களும் தங்களது உடல் நிலையில்அக்கறை காட்ட வேண்டும். நோய் பாதிப்புகள் ஏற்பட்டால் அலட்சியம் காண்பிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும். நாள்பட்ட நோய்கள் இருந்தால் முறையான சிகிச்சை பெற வேண்டும். மன அழுத்தத்துடன் இருக்க கூடாது என ஆலோசனைகள் வழங்கப்பட்டது. பின்னர் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

Related Stories: