ஒட்டன்சத்திரம் குடிநீர் திட்டத்தை கண்டித்து பாலக்காட்டில் காங்கிரஸ் கடையடைப்பு போராட்டம்

பாலக்காடு, ஆக.6: ஆழியாறு அணையிலிருந்து  ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டுசெல்வதை கண்டித்து சித்தூர், நெம்மாரா  ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் சார்பில் கடையடைப்பு போராட்டம் நேற்று நடந்தது. இப்போராட்டத்தில் தமிழக  அரசு இத்திட்டத்தை வாபஸ் பெறவேண்டும், கேரள அரசு இந்த திட்டத்தை கண்டிக்க வேண்டும் என  வலியுறுத்தினர். நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடந்த போராட்டத்தால் மக்களின்  இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. போராட்டம் காரணமாக பள்ளி,  கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

Related Stories: