க.க.சாவடி அருகே கஞ்சா விற்ற கேரள வாலிபர் கைது

மதுக்கரை.ஆக. 6: க.க.சாவடி எஸ்ஐ சரவணன் மற்றும் போலீசார் நேற்று மாலை ரோந்து சென்ற போது, வேலந்தாவளம் ரோட்டிலுள்ள மாலகோவில் அருகே பஸ்டாண்டில் சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர் போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தார். அவரை துரத்திப்பிடித்து போலீசார் விசாரித்ததில் அவர் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் எரிச்சான்பதியை சேர்ந்த தங்கவேல் என்பவரின் மகன் ஜெகதிஸ்வரன்(24)என்பதும் அவர் அந்த பகுதியில் கஞ்சா விற்பதும் தெரியவந்தது. உடனே அவரை கைது செய்து அவரிடமிருந்த சுமார் ஒருகிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Related Stories: