.மாவட்டத்தில் மகளிர் குழுவினரின் உற்பத்தி பொருட்கள் ஆன்லைனில் விற்பனை

கோவை, ஆக.6: கோவை மாவட்டத்தில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவி குழுக்கள் இருக்கிறது. இதில், 1.60 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் உறுப்பினர்களாக இருக்கின்றனர். சுய உதவி குழுவினர் பல்வேறு ெதாழில்களை செய்கின்றனர். துணி உற்பத்தி, தையல், பாக்கு மட்டை, மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரித்தல், பல்வேறு உணவு பொருட்கள் உற்பத்தி, வீட்டிற்கு ேதவையான பொருட்கள் தயாரிப்பு என பல்வேறு தொழில்களை செய்து வருகின்றனர். ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை இவர்கள் உற்பத்தி செய்த போதிலும் போதுமான விற்பனை சந்தை இல்லாததால் விலை கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

மாவட்ட அளவில் மகளிர் குழுவினர் உற்பத்தி செய்யும் பொருட்களை ஆன்லைன் மூலமாக சந்தைப்படுத்தி விற்பனை செய்யும் திட்டம் துவக்கப்பட்டுள்ளது. பொருட்கள் விற்பனை செய்யும் வெப்சைட்களின் மூலமாக மகளிர் சுய உதவி குழுவினர் உற்பத்தி செய்த பொருட்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த விற்பனை வெப்சைட் நிறுவனங்களின் மூலமாக பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. இதன்மூலம், மகளிர் குழுவினர் உற்பத்தி, வருவாய் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மகளிர் குழுவினர் மூலமாக மஞ்சள் பை உற்பத்திக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் மஞ்சள் பை அதிகமாக உற்பத்தி செய்து விற்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. காகிதத்தில் தயாரித்த பொருட்கள், மண்ணால் தயாரித்த பொருட்கள், பனை ஓலை பொருட்கள், தேங்காய் நார், தேங்காய் மட்டை, ஓடுகளால் தயாரித்த பொருட்கள் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. வனத்தில் விளையில் பொருட்களை வன கிராம பகுதி மகளிர் குழுவினர் மூலமாக வனத்துறையின் உரிய அனுமதியின் பேரில் விற்பனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. மலைகிராம சுய உதவி குழுவினரின் உற்பத்தி பொருட்களை மக்கள் போட்டி போட்டு வாங்கி செல்கின்றனர்.

மகளிர் குழுவினர் மூலமாக ஊராட்சி பகுதிகளில் முருங்கை மரக்கன்று நடவு திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மகளிர் குழுவினர் பொருட்களை விற்க கண்காட்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் மகளிர் சுய உதவி குழுவினர் சிறிய அளவில் சுய தொழில் ெசய்கின்றனர். சிலர் தொழில் முனைவோர்களாக இருக்கின்றனர். இவர்களை மகளிர் திட்ட பிரிவினர் மூலமாக ஒருங்கிணைத்து பெரிய அளவில் செயல்பட வைக்க தேவையான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்ட அளவில் சுய உதவி குழுவினருக்கு சுழல் நிதி தடையின்றி வழங்கப்பட்டு வருகிறது.

இது குறித்து மகளிர் திட்டத்தினர் கூறுகையில்,‘‘ மதி அங்காடிகள், விற்பனை சங்க வளாகங்கள் அமைத்தல் போன்ற திட்டங்கள் மேற்கொள்ளப்படும். வரும் காலத்தில் மகளிர் சுய உதவி குழுவினர் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து பகுதியிலும் மகளிர் சுய உதவி துவக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்தந்த பகுதியில் தகுதியான தொழில் வாய்ப்புகள் அடிப்படையில் அவர்கள் ெதாழில் செய்து வருகின்றனர். கிராம பகுதி பெண்கள் ஆர்வத்துடன் தொழில் செய்கிறார்கள். மகளிருக்கு சுய தொழில் செய்ய பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் மகளிர் குழுவினர் உற்பத்தி பொருட்கள், விற்பனை அதிகமாகும் என எதிர்பார்க்கிறோம்,’’ என்றனர்.

Related Stories: