×

மல்லிகை பூ கிலோ ரூ.2400க்கு விற்பனை

சத்தியமங்கலம், ஆக.6:  சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் மல்லி, முல்லை, சம்பங்கி உள்ளிட்ட மலர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு விளையும் பூக்கள் செடிகளில் இருந்து பறிக்கப்பட்டு சத்தியமங்கலத்தில்  விவசாயிகளால் நடத்தப்படும் பூ மார்க்கெட்டிற்கு கொண்டு சென்று ஏலம் முறையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு, ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.  இந்நிலையில் சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் பருவநிலை மாற்றம் காரணமாக மல்லிகை பூ விளைச்சல் குறைந்ததால் நேற்று சத்தியமங்கலம் பூ மார்க்கெட் மல்லி வரத்து குறைந்தது.  நேற்று முன்தினம் ஒரு கிலோரூ.1600 க்கு விற்ற மல்லிகை பூ நேற்று ரூ.2400க்கு விற்பனையானது. இதேபோல் முல்லை ஒரு கிலோ ரூ.860 க்கும், சம்பங்கி ரூ.200 க்கும் விற்பனையானது.  ஆடிவெள்ளி உள்ளிட்ட விசேஷ நாட்கள் இருப்பதாலும், பருவநிலை மாற்றம் காரணமாக பூக்கள் விளைச்சல் குறைந்துள்ளதாலும், பூக்கள் விலை அதிகரித்துள்ளதாக சத்தியமங்கலம் மலர்கள் விவசாயிகள் சங்கத் தலைவர் முத்துசாமி, செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தெரிவித்தனர்.

Tags :
× RELATED அவிநாசிலிங்கேசுவரர் கோயில் திருவிழா; சுவாமி புறப்பாடு