சேவல் சண்டை 33 பேர் கைது

பெருந்துறை,ஆக.6: ஈரோடு மாவட்டம், பெருந்துறை, கொங்கு நகர் பகுதியில் சிவகாமி என்பவரது வீட்டின் பின்புறம் உள்ள கால் நடை வளர்ப்புப் பகுதியில், பணம் வைத்து சேவல் சண்டை நடப்பதாக பெருந்துறை காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், நேற்று முன் தினம் காவல் துறையினர் அங்கு சென்று கண்காணித்ததில் சிவகாமியின் மகன் தினேஷ்குமார் (30) மற்றும் அவரது ராஜ்குமார் ஆகியோர் தலைமையில் ஒரு கும்பல் பணம் வைத்து சேவல் சண்டையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து, அனைவரையும் சுற்றி வளைத்துப் பிடித்த போலீசார், சேவல் சண்டையில் ஈடுபட்டதாக 33 பேர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும், சண்டைக்கு பயன்படுத்தப்பட்ட 8 சேவல்கள், சேவல்களின் கால்களில் கடப்படும் கத்திகள் 21 மற்றும் சேவல்களை கொண்டுவர பயன்படுத்தப்பட்ட 2 கார்கள், 6 பைக்குகள், சூதாட்டப் பணம் ரூ.36,190 ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

Related Stories: