ஒன்றிய அரசை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

வாடிப்பட்டி, ஆக. 6: வாடிப்பட்டியில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் காஸ் சிலிண்டர், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய ஒன்றி அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வாடிப்பட்டி பேருந்து நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத்தலைவர் ஆலாத்தூர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். நகர தலைவர் முருகானந்தம், வட்டாரத் தலைவர் குருநாதன், பழனிவேல், சண்முக சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எஸ்.சி.,எஸ்.டி.,பிரிவு மாநில துணைத்தலைவர் மூர்த்தி வரவேற்றார். மாவட்ட பொருளாளர் நூர்முகமது ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். மனிதஉரிமை பிரிவு மாவட்டத்தலைவர் ஜெயமணி ஆர்பாட்டத்தை விளக்கி பேசினார். இதில் திரளான காங்கிரசார் பங்கேற்று மத்திய அரசினையும், மோடியையும் கண்டித்து கோஷங்களை எழுப்பினர். முடிவில் இளைஞர் காங்கிரஸ் தொகுதி துணைத்தலைவர் நவீன்குமார் நன்றி கூறினார்.* அவனியாபுரம் பகுதியில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் அம்மாபட்டி பாண்டியன் உட்பட 80க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில், ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

Related Stories: