×

மதுரையில் கஞ்சா விற்ற 8 பேர் கைது: 43 கிலோ பறிமுதல்

மதுரை, ஆக. 6: மதுரையில் கஞ்சா விற்பனை செய்து வந்த 8 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 43 கிலோ கஞ்சா மற்றும் டூவீலர்கள், செல்போன்களை பறிமுதல் செய்தனர்.மதுரை திருப்பாலை மற்றும் செல்லூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் பேரில் போலீசார் அப்பகுதியில் சோதனை செய்தனர். இதில் எஸ்.குலமங்கலத்தை சேர்ந்த டேவிட்(25), அகஸ்டின்(23), கடச்சனேந்தலை சேர்ந்த சாம்சுந்தர்(22), முருகனாந்தம்(22), கோச்சடையை சேர்ந்த சேர்ந்த விக்னேஷ்(23), செல்லூரை சேர்ந்த அய்யனார்(23), அஜித்(22) மற்றும் வீரபிரபு(22) ஆகியோர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரிந்தது.

8 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 43 கிலோ கஞ்சா, கத்தி, 3 டூவீலர், 4 செல்போன்களை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
போலீசார் கூறும்போது, ‘‘ஆந்திராவில் இருந்து கடத்தி வந்து திருப்பாலை பகுதியில் வைத்து கஞ்சா சில்லரை விற்பனை செய்து வந்துள்ளனர். புறநகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்ய நெருக்கடி ஏற்பட்டு வருவதால் அந்த வியாபாரிகள் நகரில் விற்பனையை தொடங்கி உள்ளனர். கமிஷனர் செந்தில் குமார் உத்தரவின் பேரில் நகரில் விற்பனை செய்யும் வியாபாரிகளை கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார். எனவே, கஞ்சா விற்போரை கண்டுபிடித்து கைது செய்வதற்கான வேட்டை தொடரும்’’ என்றனர்.

Tags : Madurai ,
× RELATED மதுரை மீனாட்சி- சுந்தரேஸ்வரர் கோயில்...