காஞ்சிபுரம் அருகே கஞ்சா விற்ற 2 இளைஞர்கள் கைது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தை அடுத்த செவிலிமேடு கீழ்களத்துமேடு தெருவை சேர்ந்தவர் சபரி (26). தேனம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் மதன் (22). இவர்கள் 2 பேரும் காஞ்சிபுரம் அருகே தேனம்பாக்கம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வருவதாக காஞ்சிபுரம் தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் தாலுகா போலீசார் காஞ்சிபுரத்தை அடுத்த தேனம்பாக்கம் வேதபாடசாலை பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்றுகொண்டிருந்த 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், முன்னுக்குப்பின் முரணாக தகவல் அளித்தாதால் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தியதில் 2 பேரும் அப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவது தெரியவந்தது. எனவே, வழக்குப் பதிவு செய்த போலீசார், 2 பேரையும் கைது செய்து காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, காஞ்சிபுரம் கிளைச்சிறையில் அடைத்தனர். மேலும் அவர்கள் மறைத்து வைத்திருந்த 1 கிலோ கஞ்சா போதைப் பொருளையும் பறிமுதல் செய்தனர்.

Related Stories: