கலைஞரின் நினைவு தினத்தையொட்டி திமுக சார்பில் அமைதி ஊர்வலம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில், கலைஞரின் 4ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் காஞ்சிபுரம் காந்தி ரோடு பெரியார் தூண் அருகே இருந்து அமைதி ஊர்வலம் புறப்படுகிறது. இந்த ஊர்வலம் நாளை காலை 6 மணிக்கு மாவட்ட கழகம் அலுவலகமான கலைஞர்  பவள மாளிகை வரை  அமைதி ஊர்வலமாக வந்து கலைஞர், அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. இதில் எம்பி, எம்எல்ஏக்கள் மாவட்ட ஒன்றிய, நகர,  நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு மரியாதை செலுத்திடமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், மாவட்டம் முழுவதும் உள்ள கிளைகள் முழுவதும் கலைஞர் படத்திற்கு சிலைக்கு மாலை அணிவித்து நிர்வாகிகளும், உள்ளாட்சி பிரதிகளும் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்திடவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories: