பாவைகுளம் கிராமத்தில் போர்வெல் அமைக்கும் பணி

பண்ருட்டி, ஆக. 6: பண்ருட்டி அருகே அரசடிக்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட பாவைகுளம் கிராமத்தில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான போர்வெல் அமைக்கும் பணி நேற்று நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் அஞ்சலை வீரபாண்டியன் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் ராமகிருஷ்ணன், துணைத்தலைவர் அமுதா சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய குழு சேர்மன் சபா.பாலமுருகன் கலந்து கொண்டு ரூ.11 லட்சம் மதிப்பில் புதிய போர்வெல் அமைக்கும் பணியை துவக்கி வைத்தார். கல்வி குழுமம் சுப்பிரமணியன், ஊராட்சி செயலாளர் சிவஞானம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: