நீதிபதி எனக்கூறி இன்ஸ்பெக்டருக்கு மிரட்டல்

அம்பத்தூர்: அம்பத்தூர் அடுத்த கள்ளிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் கபிலன் (58). இவரது மகன் நெப்போலியன், தன்னிடம் வரதட்சணை கேட்டு  துன்புறுத்துவதாக அவரது மனைவி அம்பத்தூர் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, நெப்போலியன், அவரது தந்தை கபிலன், தாய் மீது வழக்குப்பதிவு செய்ய அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்தார். அதன்படி இன்ஸ்பெக்டர் ஜோதிலட்சுமி வழக்குப்பதிவு செய்ய முடிவு செய்தார்.

இந்நிலையில், அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்துக்கு நேற்று வந்த கபிலன், எனது மகன் நெல்போலியன் மீது வரதட்சணை வழக்குப்பதிவு செய்யக்கூடாது என்றும், நான் நீதிபதி. என்னை மீறி வழக்கு பதிந்தால் தொலைத்து விடுவேன், என மிரட்டியுள்ளார். இதுகுறித்து சட்டம் - ஒழுங்கு ஆய்வாளர் ராமசாமியிடம், மகளிர் இன்ஸ்பெக்டர் ஜோதிலட்சுமி புகார் செய்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: