இரும்பு கடையில் ரூ.72 ஆயிரம் திருட்டு

துவரங்குறிச்சி: மணப்பாறை அடுத்த பழையக்கோட்டை ஊராட்சி வெள்ளைபூலாம்பட்டியை சேர்ந்தவர் துரைராஜ் (46). இவர் திருச்சி - திண்டுக்கல் நெடுஞ்சாலை வெள்ளைக்கல் பகுதியில் கட்டட தளவாட பொருட்கள் விற்பனை செய்யும் டிரேடர்ஸ் நிறுவனம் வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் ஊழியர்கள் கடையை  பூட்டிவிட்டு சென்றனர். பின்னர் நேற்று காலையில் மீண்டும் கடையை திறக்க வந்தபோது, பின்புறம் இரும்பு தடுப்புகள் அகற்றப்பட்டு இருப்பது கண்டு திடுக்கிட்டனர். சிசிடிவி கேமரா இணைப்புகள் துண்டிக்கப்பட்டு இருந்தன. கல்லாவில் சோதனை செய்தபோது, அதிலிருந்து ரூ.72 ஆயிரம் திருட்டு போய் இருப்பது தெரியவந்தது. இது குறித்து துரைராஜ் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடிவருகின்றனர்.

Related Stories: