விவசாயிகள் வலியுறுத்தல் மின்சாரம் தாக்கி உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு ரூ.9 லட்சம் இழப்பீடு

மதுரை: திருச்சி மாவட்டம், மருங்காபுரி அருகே மினிக்கியூரைச் சேர்ந்த லட்சுமி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘என் கணவர் பழனிச்சாமி. கடந்த 11.6.2016ல் வயலில் விவசாய பணிக்காக சென்றார். திடீரென கடுமையான காற்று வீசியுள்ளது. அப்போது கேபிள் வயர் அறுந்து மின்சார வயர் மீது விழுந்தது. இதனால் கேபிள் வயரில் மின்சாரம் பாய்ந்துள்ளது. அப்போது ஒரு கேபிள் வயர் என் கணவரின் தலை மீது விழுந்தது. இதில், எனது கணவர் பலியானார். என் கணவரின் வருமானத்தை நம்பியே என் குடும்பம் இருந்தது. தற்போது போதிய வருமானமின்றி மிகுந்த சிரமத்தில் உள்ளோம். எனவே, எனக்கு உரிய இழப்பீடு வழங்குமாறு உத்தரவிட வேண்டும்’’என்று கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.விஜயகுமார், மனுதாரருக்கு ரூ.9.07 லட்சத்தை 6 சதவீத வட்டியுடன் 12 வாரத்திற்குள் மின்சார வாரியத்தின் சார்பில் வழங்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: