பாலூரில் ரயில் மறியலால் பரபரப்பு

செங்கல்பட்டு: சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழியாக திருமால்பூர் வரை மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், நாள்தோறும் சென்னைக்கு வேலைக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் சென்று வருகின்றனர். இந்நிலையில் மாலை 5.15 மணிக்கு பாலூர் ரயில் நிலையத்திற்கு வரும் மின்சார

ரயில் சுமார் 40 நிமிடங்களுக்கு மேலாக நிறுத்தப்படுகிறது.

அதனால், பயணிகள் குறித்த நேரத்திற்கு வீட்டிற்கு செல்ல முடியாமல் தவித்து  வந்துள்ளனர்.இந்நிலையில், நேற்று மாலை பாலூர் ரயில் நிலையத்தில் இறங்கி திருமால்பூர் மின்சார  ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த  வந்த போலீசார் பயணிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி சமரசம் செய்து வைத்தனர்.

Related Stories: