இன்ஜினியரிங் மாணவர் புதிய நடைமுறை; உயர்கல்வி துறை அறிவிப்பு

சென்னை: பொறியியல் படிப்பை தேர்வு செய்தும், அதில் மாணவர்கள் சேராமல் போகும் இடங்கள் கடைசி வரை காலி இடங்களாகவே இருந்து விடுகிறது.

அதாவது, படிப்பை தேர்வு செய்து, அந்தந்த கல்லூரிகளில் சேராமல் போகும் மாணவர்களின் விவரங்களை அந்தந்த கல்லூரிகள் உடனடியாக தெரிவிக்கும் வகையில் ஏற்கனவே இணையதளம் உருவாக்கப்பட்டு இருந்தது.

அது நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்த நிலையில், தற்போது மீண்டும் நடைமுறைப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இதன் மூலம் படிப்பை தேர்வு செய்த 7 நாட்களுக்குள் அந்த இடத்தில் மாணவர்கள் சேரவில்லையென்றால், அந்த விவரத்தை அந்தந்த கல்லூரிகள் சுட்டிக்காட்டும் பட்சத்தில் 2ம் கட்ட கலந்தாய்வில் அந்த காலி இடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது.

Related Stories: