பறக்கும் ரயில் சேவை ரத்து

சென்னை: பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை- வேளச்சேரி இடையே இயக்கப்படும் 4 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் - வேளச்சேரி இடையே (43794) இரவு 8.25 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், கும்மிடிப்பூண்டி- வேளச்சேரி இடையே (42656) இரவு 8.35 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் இன்று சென்னை கடற்கரை- வேளச்சேரி இடையே ரத்து செய்யப்படுகிறது.

அதைப்போன்று வேளச்சேரி- சென்னை கடற்கரை இடையே (41138) இரவு 10.50 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், வேளச்சேரி- சென்னை கடற்கரை இடையே இயக்கப்படும் (41140) இரவு 11.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: