சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும்இறைச்சி, மீன் கடைகளை அகற்ற கோரிக்கை

திருப்பூர்: பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் வகையில் செயல்படும் சாலையோர இறைச்சி, மீன் கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என நுகர்வோர் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் சண்முகசுந்தரம் கூறுகையில், திருப்பூர் மாநகராட்சிக்கு உள்பட்ட அவிநாசி சாலையில் காந்தி நகர், பெரியார் காலனி, அனுப்பர்பாளையம், குமார் நகர் மற்றும் பல்லடம் சாலை, மங்கலம் சாலை, தாராபுரம் சாலை, காங்கேயம் சாலை ஆகியவற்றின் இருபுறங்களிலும், மாநகராட்சி அனுமதி இல்லாமல், நெடுஞ்சாலைத்துறை அனுமதி இல்லாமல் இறைச்சி கடைகள், மீன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகள் மூலமாக சேகரமாகும் கழிவுகளை அப்புறப்படுத்தாமல் அப்படியே விட்டு விடுகின்றனர். சில இடங்களில் கழிவுகளை சாக்கடை கால்வாய்களில் கொட்டி விடுகின்றனர். இதனால், அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரம் மிகவும் பாதிக்கப்படுகிறது. தொற்று நோய்களுக்கும் இது வழிவகுக்கிறது. மேலும், சாலையோரத்தில் திடீரென முளைக்கும் இதுபோன்ற கடைகளால் கடும் போக்குவரத்து பாதிப்பும் ஏற்படுகிறது. இவை சுகாதார விதிகளுக்கு உள்பட்ட செயல்படுவதில்லை. தற்போது மழை காலம் என்பதால் தொற்று நோய்கள் எளிதில் பரவ வாய்ப்புள்ளது. எனவே, மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் வகையில் செயல்படும் கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்றார். சுற்றுலா பயணிகளுக்கு தடை கரையோர மக்களுக்கு எச்சரிக்கை கலெக்டர்  வினீத் கூறுகையில்,``திருப்பூர் மாவட்டம், உடுமலை தாலுக்கா அமராவதி அணை  மற்றும் அதன் நீர்பிடிப்பு பகுதிகளில் பருவமழை பெய்து வருவதால் அணைக்கு  நீர்வரத்து அதிகரித்துள்ளது. அமராவதி அணையின் முழு கொள்ளளவு 90 அடியை எட்ட  உள்ளது. இந்நிலையில், உபரிநீர் அமராவதி ஆற்றில் திறந்து  விடப்பட்டுள்ளது. இதனால், இன்னும் அதிகமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட  வாய்ப்பு உள்ளது. அமராவதி ஆற்றங்கரையோரம் மற்றும் இதர தாழ்வான பகுதிகளில்  வசிக்கும் பொதுமக்கள் விழிப்புடனும், முன்னெச்சரிக்கையுடனும் இருக்க  வேண்டும். பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ  முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளை ஆற்றில் இறங்கி விளையாட  பெற்றோர் அனுமதிக்க கூடாது. இதுகுறித்து ஒலிபெருக்கி மூலம் அபாய  எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. ஆற்றின் நீர்வரத்து தொடர்ந்து  கண்காணிக்கப்பட்டு வருகிறது’’என்றார்.

Related Stories: