காவலர், தீயணைப்பாளர் பணிகளுக்கு முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம்

ஊட்டி: தமிழ்நாடு  சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் காவலர், சிறை காவலர்,  தீயணைப்பாளர் பணிகளுக்கு முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பித்து பயன்பெற  அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு  வாரியத்தால் நடத்தப்பட உள்ள காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை  மற்றும் மீட்பு பணிகள்துறை ஆகியவற்றில் இரண்டாம் நிலை காவலர் (ஆயுதப்படை  மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை), இரண்டாம் சிறை காவலர் மற்றும்  தீயணைப்பாளர் ஆகிய பதவிகளுக்கான தேர்வு நடைபெற உள்ளது. இப்பணியிடங்களில்  முன்னாள் படைவீரர்களுக்கு 5 சதவீதம் சிறப்பு இட ஒதுக்கீடு  வழங்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச கல்வித்தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி  பெற்றிருக்க வேண்டும். முன்னாள் படைவீரர்கள் இப்பணியிடத்திற்கு  விண்ணப்பிக்க 01.07.2022 அன்று 47 வயதிற்கு (01.07.1975ல் இருந்து  01.07.2004க்குள் பிறந்திருக்க வேண்டும்) மேற்படாதவராக இருக்க வேண்டும்.  இத்தேர்விற்கு விண்ணப்பித்தல் குறித்த முழு விவரங்கள் www.tnusrbonline.org என்ற இணையதளம் மூலமாக அறிந்து கொள்ளலாம். எனவே, நீலகிரி மாவட்டத்தை சார்ந்த  முன்னாள் படைவீரர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.  தேர்விற்கு விண்ணப்பித்த விவரங்களை நீலகிரி மாவட்ட முன்னாள் படைவீரர் நல  உதவி இயக்குநர் அலுவலகத்தில் தெரிவிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு  0423-2444078ல் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம்  தெரிவித்துள்ளது.

Related Stories: