கூடைப்பந்து அணிக்கு உபகரணங்கள் வழங்கல்

பள்ளிபாளையம், ஆக.5: பள்ளிபாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், 2 ஆயிரம் மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு கைப்பந்து, வாலிபால் உள்ளிட்ட விளையாட்டுகளில் மாணவிகள் பயிற்சி பெற்று வருகின்றனர். இந்தாண்டு கூடைப்பந்து அணியினை உருவாக்கும் முயற்சியில், பள்ளி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. கூடைப்பந்து விளையாட மாணவிகளும் ஆர்வமாக உள்ளனர்.

மாணவிகளின் ஆர்வத்தை பாராட்டிய பள்ளி மேலாண்மை குழுவினர், கூடைப்பந்து விளையாட்டிற்கான வலை, பந்து உள்ளிட்ட உபகரணங்களை வழங்கி ஊக்கப்படுத்தியது. இதற்காக பள்ளி மேலாண்மை குழு தலைவர் பாலகிருஷ்ணன் கூடை பந்து உபகரணங்களை தலைமை ஆசிரியர் சரஸ்வதியிடம் வழங்கினார். நிகழ்ச்சியில் விளையாட்டு துறை ஆசிரியர்கள் அப்துல், ராஜேஸ்வரி, வந்தா ஆகியோர் பங்கேற்றனர்.

Related Stories: