சாலை விபத்தில் தம்பி பலி; துக்கம் தாளாமல் சகோதரி தற்கொலை: அமைந்தகரையில் உருக்கம்

அண்ணாநகர்: சென்னை அமைந்தகரை பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (56), தச்சர். இவரது மகன் கண்ணன் (18), அண்ணாநகரில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். மகள் மதுமிதா (22), திருமணமாகி கணவருடன் வந்து வந்தார். இந்த தம்பதிக்கு 5 மாதத்தில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், கடந்த 6 மாதத்துக்கு முன் கண்ணன் சாலை விபத்தில் இறந்தார். இதனால் தம்பியை நினைத்து மதுமிதா மிகுந்த சோகத்தில் இருந்துள்ளார். சரியாக சாப்பிடாமலும் யாருடனும் பேசாமலும் இருந்ததாக தெரிகிறது. நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் திடீரென மதுமிதா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

அவரது உடலை பார்த்து கணவர், குடும்பத்தினர் கதறி அழுதனர். தகவல் கிடைத்ததும் அமைந்தகரை போலீசார் சென்று விசாரணை நடத்தினர். உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். தம்பி மீது மதுமிதா அதிக பாசம் வைத்திருந்திருக்கிறார். இதனால் அவர் இறந்துபோனதை தாங்க முடியாமல் தற்கொலை செய்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. மதுமிதாவுக்கு திருமணமாகி ஒன்றரை வருடமே ஆவதால் திருமங்கலம் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிட்டப்பட்டுள்ளது.

Related Stories: