குடிநீர் வாரிய லாரிகளில் பேட்டரிகள் திருட்டு

பெரம்பூர்: ராஜமங்கலம் பூம்புகார் நகர் 65வது வட்டத்தில் குடிநீர்வாரிய உதவி பொறியாளர் அலுவலகம் உள்ளது. இங்கு சர்மான்கான் (36), உதவி பொறியாளராக பணியாற்றுகிறார். வழக்கம்போல் நேற்றுமுன்தினம் இரவு மெட்ரோ வாட்டருக்கு சொந்தமான லாரிகள் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருந்தன. நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு பணியாளர் பாஸ்கர் வந்தபோது அங்கு நிறுத்தப்பட்டிருந்த 4 லாரிகளில் இருந்தும் பேட்டரிகள் திருடப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ராஜமங்கலம் போலீசில் புகார் கொடுத்தனர்.

போலீசார் வழக்குபதிந்து அலுவலகம் மற்றும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, பேட்டரி திருடர்களை தேடி வருகின்றனர். பெரம்பூர், திருவிக நகர் மற்றும் பெரவள்ளூர் பகுதிகளில் உள்ள மாநகராட்சி அலுவலகங்களில் ஆட்டோக்களில் பேட்டரிகள் திருடப்பட்டன. போலீசாரின் தீவிர நடவடிக்கை காரணமாக பேட்டரி திருட்டு குறைந்திருந்த நிலையில் தற்போது ராஜமங்கலம் பகுதியில் பேட்டரிகள் திருடப்பட்டுள்ளது.

Related Stories: