திருவள்ளூர் அருகே பரபரப்பு 25 டன் மரக்கட்டைகள் ஏற்றி வந்த லாரி பழுதால் 3 மணி நேரம் டிராபிக் ஜாம்

திருவள்ளூர்: திருவள்ளூரில் பெரும்பாலான அரசு அலுவலகங்கள், தனியார் மற்றும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் என ஏராளமாக உள்ளன.

 அதனால் திருவள்ளூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான பஸ்கள், கார், வேன் மற்றும் ஆட்டோ, இரு சக்கர வாகனமும் வந்து செல்லும். இதனால் இந்தப்பகுதி மிகவும் பரபரப்பாகவே காணப்படும். இந்நிலையில் தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து மரக்கட்டைகளை ஏற்றி வந்த லாரி, சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலை சி.வி.நாயுடு சாலையில் வந்தது. அங்குள்ள மர குடோனில் கட்டையை இறக்குவதற்காக பின்னோக்கி இயக்கியபோது திடீரென பழுதாகி நெடுஞ்சாலையின் நடுவில் நின்றது. இதனால் வாகனங்கள் அணிவகுத்து நின்றது.

கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்த திருவள்ளூர் டவுன் போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போக்குவரத்தை சீர் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். ஒரே வழியில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது. இதனால் வாகன நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து ஊர்ந்து சென்றது. நேற்று காலை நேரம் என்பதால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ,மாணவிகள் வேலைக்கு செல்பவர்கள், மருத்துவமனைக்கு செல்பவர்கள், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அனைவரும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். 3 மணி நேரத்துக்கு பிறகு லாரியில் பழுது சரி செய்யப்பட்டு போக்குவரத்து சீரானது.

Related Stories: