×

கந்தர்வகோட்டையில் பழுதடைந்து கிடக்கும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி கட்டிடம் புதிதாக கட்ட வலியுறுத்தல்

கந்தர்வகோட்டை,ஆக.3: புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை வாங்காரஒடை குளமேல் கரை அருகே ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி துறையின் கந்தர்வகோட்டை அலுவலகம் அரசுக்கு சொந்தமான இடத்தில் சொந்த கட்டிடத்தில் பல வருடங்களாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்தக் கட்டிடம் தற்சமயம் மிகவும் பழுதடைந்து, இடிந்து விழுந்து சூழ்நிலையில் உள்ளது. கந்தர்வகோட்டை ஊராட்சிக்கு சொந்தமான கிராமசேவை மைய கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இதானல் ஊராட்சிக்கு கிராம சேவை மைய கட்டிடம் இல்லாமல் பொதுமக்களின் சேவை குறைபாடு ஏற்படுகிறது.

மேலும் ஒருங்கினைந்த குழந்தைகள் வளர்ச்சி கட்டிடம் பழுது அடைந்து உள்ளது. இந்த கட்டிடம் எப்போழுது இடித்து விழும் சூழலில் இருப்பாதல் சம்மந்தபட்ட துறையினர் பழுது அடைந்து உள்ள கட்டிடதை உடனே இடிந்து அப்புறபடுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கட்டிடம் குள கரையில் இருப்பதாலும் அவ்வழியே செல்லுபவர்கள் பழுதடைத்த கட்டித்தில் அமர்ந்து செல்லுகிறர்கள். அவர்கள் கட்டிடத்தில் இருக்கும்போது இடித்து விழுத்தல் உயிர் சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அதற்கு முன்பாக பழுது அடைந்துள்ள கட்டிடதை இடித்து புதிய கட்டிடம் கட்ட சம்மந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Tags : Gandharvakot ,
× RELATED கந்தர்வகோட்டை பகுதிகளில் கால்நடைகளுக்கு தீவனம் சேகரிப்பு பணி மும்முரம்