கரூர் மாவட்டத்தில் 3வது நாளாக மழை 123.90 மிமீ பதிவு

கரூர், ஆக. 3: வெப்பசலனம் மற்றும் கீழடுக்கு சுழற்சி காரணமாக கரூர் மாவட்டத்தில் மூன்றாவது நாளாக நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை 123.90 மிமீ மழை பெய்திருந்தது. வெப்பசலனம் மற்றும் கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, கரூர் மாவட்டத்தின் காற்றின் தாக்கம் குறைந்து இரவு நேரங்களில் கடந்த மூன்று நாட்களாக மழை பெய்து வருகிறது.

அந்த வகையில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை மாவட்டத்தில் பரவலாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. அதன்படி, கரூர் 20 மிமீ, அரவக்குறிச்சி 5 மிமீ, அணைப்பாளையம் 7.2 மிமீ, குளித்தலை 2 மிமீ, தோகைமலை 3.2 மிமீ, கிருஷ்ணராயபுரம் 21 மிமீ, மாயனு£ர் 17 மிமீ, பஞ்சப்பட்டி 13.2 மிமீ, கடவூர் 10 மிமீ, பாலவிடுதி 16. 2 மிமீ, மயிலம்பட்டி 4.5 மிமீ என மாவட்டம் முழுதும் 123.90மிமீ மழை பெய்திருந்தது. இதன் மொத்த சராசரி 10.33 ஆக உள்ளது. இந்த மழையின் காரணமாக மாவட்டத்தின் சீதோஷ்ணநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories: