வெள்ளியணை அருகே ைபக்கில் வந்த கோழி வியாபாரிகளிடம் ரூ.14ஆயிரம் வழிப்பறி காரில் வந்த மர்மகும்பலுக்கு வலை

கரூர், ஆக3: கரூர் மாவட்டம் வெள்ளியணை அருகே கோழி வியாபாரிகளை, காரில் வந்த மர்மக்கும்பல் வழிமறித்து ரூ. 14ஆயிரத்தை பறித்துச் சென்றனர். மர்மக்கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்தவர் விக்னேஷ்(25). கோழி வியாபாரி. இவரும், இவரின் தாத்தா ஆகிய இருவரும் கரூர் மாவட்டம் வெள்ளியணை அடுத்துள்ள மஞ்சநாயக்கன்பட்டியில் கோழி வாங்குவதற்காக பைக்கில் வந்தனர்.

வெள்ளியணை அடுத்துள்ள அய்யம்பாளையம் காலணி அருகே பைக்கில் வந்து கொண்டிருந்த போது, எதிரே ஒரு கார் பைக் அருகே வந்து நின்றது. அந்த காரில் இருந்து இறங்கிய அடையாளம் தெரியாத 4 பேர், விக்னேஷின் தாத்தாவிடம் இருந்த ரூ. 14ஆயிரத்தை பறித்துக் கொண்டு காரில் தப்பியோடி விட்டார். இந்த சம்பவம் குறித்து விக்னேஷ், வெள்ளியணை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிந்து காரில் வந்த மர்மகும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories: