×

ஆற்றை கடந்து செல்வதில் சிரமம் கூடலையாத்தூரில் உயர்மட்ட பாலம்

முஷ்ணம், ஆக. 2:    முஷ்ணம் அருகே கூடலையாத்தூர் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் வெள்ளாறு, மணிமுக்தாறு ஆகிய இரு ஆறுகள் கூடும் இடமாக உள்ளது. இப்பகுதியில் நெடுஞ்சேரி முதல் கூடலையாத்தூர் வரை ஆற்றின் கரையின்றி உள்ளது. மழைக் காலங்களில் மழைநீர் அதிக அளவு வரும்போது பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. இப்பகுதியில் புயல் பாதுகாப்பு பேரிடர் மைய கட்டிடம் இன்றி உள்ளது. எனவே இப்பகுதியில் அவசர காலங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கும் வகையில் இந்த மையம் இப்பகுதியில் அமைக்கப்பட்டு பொதுமக்களை பாதுகாத்திட வேண்டும்.

மேலும் கூடலையாத்தூரில் உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். மழைக் காலங்களில் இப்பகுதி விவசாயிகள் விளைபொருட்களை ஆற்றைக் கடந்து மறு கரைக்கு எடுத்து வரவேண்டி உள்ளது. ஆனால் உயர்மட்ட பாலம் இல்லாததால் மழைக்காலங்களில் ஆற்றைக் கடந்து செல்வதில் கடும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. எனவே பொதுப்பணித்துறை உரிய நடவடிக்கை மேற்கொண்டு நெடுஞ்சேரி முதல் கூடலையாத்தூர் வரை உள்ள ஆற்றின் பக்கவாட்டு கரையை பலப்படுத்தியும் நெடுஞ்சேரியில் இருந்து செல்லும் வாய்க்கால் குமாரகுடி வரை ஐந்து வருடமாக தூர்வாராமல் உள்ளதால் வடிகால் வாய்க்கால்களை முறையாக தூர்வார வேண்டும் எனவும் பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kudalayathur ,
× RELATED கள்ள ஓட்டு போடுவதை தடுத்ததால் வீடு புகுந்து தாக்குதல்