அரசு பேருந்து கண்ணாடியை உடைத்தவர் கைது

உளுந்தூர்பேட்டை, ஆக. 2:  கள்ளக்குறிச்சியில் இருந்து நேற்று அரசு பேருந்து ஒன்று உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கொட்டையூர் கிராமத்துக்கு சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை சின்னசேலம் அருகே கூகையூர் கிராமத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் (45) என்பவர் ஓட்டிச் சென்றார். கொட்டையூர் பேருந்து நிறுத்தம் அருகில் பேருந்து நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த இதே கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் மகன் சூர்யா (27) என்பவர் ஏன் அடிக்கடி பேருந்து வருவது இல்லை எனக் கூறி அசிங்கமாக திட்டி டிரைவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததுடன், பேருந்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினார். இதுகுறித்து எலவனாசூர்கோட்டை காவல்நிலையத்தில் டிரைவர் பாலகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் வழக்குப்பதிந்து சூர்யாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். அரசு பேருந்து கண்ணாடியை வாலிபர் உடைத்த சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: