வாய்க்கால் ஓரத்தில் மணல் திருடிய 3 பேர் மீது வழக்கு

சிதம்பரம், ஜூலை 30:  சிதம்பரம் கான்சாகிப் வாய்க்கால் ஓரம் உள்ள அம்பேத்கர் நகர் பகுதியில் நீர் வழி ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றப்பட்டு வருகிறது. இந்த இடத்தில் அனுமதியின்றி மணல் எடுப்பதாக நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உதவி பொறியாளர் ரமேஷ் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது அங்கு டிராக்டரில் மணல் திருடப்பட்டது தெரிய வந்தது.

இதையடுத்து அவரைப் பார்த்ததும் அங்கிருந்தவர்கள் தப்பி ஓடி விட்டனர். இச்சம்பவம் குறித்து  உதவி பொறியாளர் ரமேஷ், சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் துணிசிரமேடு கிராமத்தைச் சேர்ந்த பிரேம்செல்வம், கடவாச்சேரி ஆனந்த், சிதம்பரம் கொத்தங்குடி தெரு சிரஞ்சீவி ஆகிய 3 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து அங்கிருந்து 2 டிராக்டர்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: