இடிந்து விழும் நிலையில் நீர்தேக்க தொட்டி

திட்டக்குடி, ஜூலை 29: திட்டக்குடியை அடுத்துள்ள பட்டூர் கிராமத்தில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி உள்ளது. இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. தற்போது இந்த மேல்நிலை நீர்தேக்கதொட்டி பழுதடைந்து இடிந்துவிழும் நிலையில் உள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக பலவீனமடைந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டியின் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்து வருகிறது. இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் மங்களூர் ஒன்றிய குழு தலைவர் சுகுணா சங்கர், வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன் ஆகியோர் சென்று ஆய்வு செய்தனர். அபாயகரமாக உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியை இடித்து அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். மங்களூர் ஒன்றிய குழு துணை தலைவர் கலைச்செல்வி செல்வராஜ், மாவட்ட கவுன்சிலர் செல்வி அமிர்தலிங்கம், மங்களூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பட்டூர் அமிர்தலிங்கம் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Related Stories: