மாநகராட்சி துணை மேயர் பிறந்தநாள்

கடலூர், ஜூலை 29: கடலூர் மாநகராட்சி துணை மேயர் வழக்கறிஞர் தாமரைச்செல்வன் பிறந்தநாளை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை சென்னையில் சந்தித்து பிறந்தநாள் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினார். திருமாவளவன் எம்பி பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தார். நிகழ்ச்சியில், துணை மேயர் தாமரைச்செல்வன் 30ம் தேதி சென்னையில் நடைபெற உள்ள விருதுகள் வழங்கும் விழாவிற்காக ஒரு விருதுக்கான தொகை ரூ.50,000 நன்கொடையாக அளித்தார். கடலூர் நகர செயலாளர் செந்தில், ஒன்றிய கவுன்சிலர் கோண்டூர் சிறுத்தை சீனு, பனங்காடு ஜெயபால், சவுந்தர், மாவட்ட துணை அமைப்பாளர் சின்ராசு, நெல்லிக்குப்பம் நகர செயலாளர் புலிக்கொடியன், நெல்லிக்குப்பம் நகர மன்ற உறுப்பினர் அறிவழகன், மாவட்ட துணை அமைப்பாளர் சேவல் ஜெயக்குமார், கல்பாக்கம் பூபாலன், கடலூர் நகர அமைப்பாளர் ஆறுமுகம் மற்றும் தலைமை நிலைய நிர்வாகிகள் முதன்மை செயலாளர் ஏசி பாவரசு,  செயலாளர் பாலசிங்கம், மாநில செயலாளர் கனல்விழி, வீர ராஜேந்திரன், தயா நெப்போலியன், லைவ் கார்த்தி, லைவ் குமார், விடுதலை எழில், இமயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: