வனத்துறை சார்பில் இன்று கருத்து கேட்பு கூட்டம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட வனத்துறை அலுவலர் ரவி மீனா வௌியிட்டுள்ள அறிக்கை; காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் வனத்துறை இணக்கமாக வாழவும் மக்களின் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்யும் வகையில் கருத்து கேட்பு கூட்டம் காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மைய கட்டிடத்தில் இன்று காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.

இதில், வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், சிறு, குறு மற்றும் தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், முதன்மை தலைமை வனக்காப்பாளர் சையத் முஜ்புல் அப்பாஸ், தலைமை வன உயிர் காப்பாளர்கள், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, எம்பிக்கள் டி.ஆர்.பாலு, தமிழச்சி தங்கபாண்டியன், க.செல்வம், எம்எல்ஏக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், மாவட்ட வன அலுவலர்கள், வனச்சரகர்கள், வனக்குழு தலைவர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

இந்த கூட்டத்தில் நேரடியாக பிரச்னை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும், மனுக்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த கூட்டத்தில், விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் வனத்துறை சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கைகளை நேரிடையாகவும் மனுக்கள் மூலமும் தெரிவிக்கலாம்.

Related Stories: