எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கியும் வாடகை கட்டாத கடைகளுக்கு சீல்: மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி

ஆவடி: ஆவடி மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகங்கள் பல இடங்களில் உள்ளன. இவற்றில் ஏராளமான கடைகள், லட்சக்கணக்கான ரூபாய் வாடகை நிலுவை வைத்துள்ளன. நிதியாண்டு முடிவுக்குள் இவற்றை வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, மாநகராட்சி வருவாய் பிரிவினர் களம் இறங்கியுள்ளனர். வாடகை நிலுவையில் உள்ள கடைகளுக்கு, மாநகராட்சி கமிஷனர் உத்தரவின் பேரில் ஏற்கனவே எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.

நிலுவை தொகை செலுத்தாமல் தொடர்ந்து செயல்பட்ட கடைகள் மீது கடந்த இரு நாட்களாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆவடி மார்க்கெட் வளாகத்தில் உள்ள கடைகளில், 40 கடைகளில் 15 லட்சம் ரூபாய் வாடகை நிலுவையில் உள்ளது. எச்சரிக்கை நோட்டீஸ் கடந்த மாதம் 15ம் தேதி வழங்கியும் நேற்று வரை வாடகை செலுத்தாத கடைகளை பூட்டி ‘சீல்’ வைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ஆவடி ஆணையர் தர்ப்பகராஜ் தலைமையில் வருவாய் பிரிவு ஊழியர்கள் நேற்று இந்தநடவடிக்கையில் ஈடுபட்டனர் ஒரு கடைக்கு பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் நடவடிக்கையை அடுத்து ஒரு சிலர் மணி நேரத்தில் 40 கடைகளின் உரிமையாளர்களும் நிலுவைத் தொகையை பணமாக செலுத்தினார்கள். ஆவடி மாநகராட்சி அருகேயுள்ள  40 கடைகள் ஏறத்தாழ 15 லட்சம் ரூபாய் வாடகை வசூலிக்கப்பட்டது.

Related Stories: