திருக்கழுக்குன்றம் அடுத்த தண்டரை கிராமத்தில் ரூ. 2.22 கோடி மதிப்பீட்டில் பொது கட்டிடம்; முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறப்பு: எம்பி, எம்எல்ஏ பங்கேற்பு

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் அடுத்த தண்டரை கிராமத்தில் சிட்கோ நிர்வாக அலுவலகத்திற்கு ₹2.22 கோடி மதிப்பீட்டில், பொது கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். தமிழ்நாடு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில், திருக்கழுக்குன்றம் அடுத்த  தண்டரை  கிராமத்தில் 44 ஏக்கரில்  ஒருங்கிணைந்த சிட்கோ  உள்ளது. இதில்,  ₹2 கோடியே 22 லட்சம் திட்ட மதிப்பில் வங்கி, நிர்வாக அலுவலகம், உணவகம், கூட்ட அரங்கு மற்றும் மருந்தகம் போன்ற வசதிகளுக்காக கட்டப்பட்ட பொது வசதி கட்டிடத்தை   முதல்வர்  மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை தலைமை செயலகத்தில் இருந்த  காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.     

அதனை தொடர்ந்து தண்டரை கிராமத்தில் காஞ்சிபுரம் எம்பி   ஜி.செல்வம், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத், திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி, திருப்போரூர் ஒன்றிய சேர்மன்  இதயவர்மன்,    சிட்கோ மேலாளர் பாரதி, தண்டரை ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி அறிவழகன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி திட்ட விளக்கவுரையாற்றினர். இந்நிகழ்ச்சியில், ஏராளமான அரசு அதிகாரிகள் மற்றும் சிட்கோ ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: