கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 52 போலீசார் கூண்டோடு மாற்றம்

கள்ளக்குறிச்சி, ஜூன் 25:    கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியான கள்ளக்குறிச்சி,  திருக்கோலூர், உளுந்தூர்பேட்டை ஆகிய மதுவிலக்கு காவல்நிலையத்தில் நீண்ட  நாட்களாக பணியாற்றி வந்த 22 போலீசார்களை கூண்டோடு பணியிடமாற்றம் செய்து  மாவட்ட எஸ்பி செல்வகுமார் அதிரடியாக உத்தரவிட்டார். அதாவது கள்ளக்குறிச்சி  மதுவிலக்கு காவல்நிலையத்தில் பணியாற்றி வந்த போலீசார்கள் சென்பகவல்லி,  பெரியநாயகம்டோமினிக், பாலசுப்ரமணியன் உள்ளிட்ட 22 காவலர்களும் கள்ளக்குறிச்சி,  உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர் ஆகிய உட்கோட்டத்தில் உள்ள சட்டம்ஒழுங்கு  காவல் நிலையம், மகளிர் காவல் நிலையம் மற்றும் போக்குவரத்து காவல்  நிலையத்திற்கு அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல்  கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சட்டம் ஒழுங்கு மற்றும் மகளிர்  காவல்நிலையத்தில் பணியாற்றி வந்த காவலர்கள் வெங்கடேசன், கேசவன்,  சதீஷ்குமார் உள்ளிட்ட 30 காவலர்கள் கள்ளக்குறிச்சி,  உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர் ஆகிய மதுவிலக்கு பிரிவு காவல்நிலையத்திற்கு  பணியிடமாற்றம் செய்து எஸ்பி செல்வகுமார் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: