பங்குச்சந்தையில் முதலீடு செய்வதாக ரூ.14.83 லட்சம் மோசடி:3 பேர் மீது வழக்கு

விருதுநகர், ஜூன் 25: பங்குச்சந்தையில் முதலீடு செய்வதாக ரூ.14.83 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். விருதுநகர் பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் ராணி (39). இவரது கணவர் ராஜசேகர், தனியார் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வந்தார். அப்போது, அதே கம்பெனியில் வேலை செய்த சந்திரபோஸ், அவரின் மனைவி ஹேமலதா ஆகியோர் ராஜசேகருக்கு அறிமுகம் ஆகினர். இதையடுத்து ராணியிடம் ஹேமலதா, தனது தம்பி சிவக்குமார் ஆசிரியர் வேலை செய்வதாகவும், மாலை நேரத்தில் பங்குச்சந்தையில் முதலீடு செய்து லாபம் ஈட்டி தருவதாக கூறி உள்ளனர்.

ராணியையும் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய வற்புறுத்தி உள்ளனர். இதையடுத்து ராணியும் தனது கணவரின் கம்பெனி மூடியதால் கிடைத்த பணத்தில் 20016ல் ரூ.5 லட்சம், அதன்பின் ரூ.4 லட்சம், 2017ல் வங்கி கணக்குகள் மூலம் ரூ.5.43 லட்சம் என மொத்தம் ரூ.14.83 லட்சம் கொடுத்துள்ளார். அதன்பின் பங்குச்சந்தை நிலவரம் குறித்து சிவக்குமாரிடம் கேட்டபோது உரிய பதில் தெரிவிக்கவில்லை. கொடுத்த பணத்தை திருப்பி கேட்டபோது பணத்தையும் தரவில்லை. இது குறித்து ரூரல் போலீசில் ராணி அளித்த புகாரின்பேரில் ஹேமலதா, அவரின் கணவர் சந்திரபோஸ், சிவக்குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: