பணி நிரந்தரம் கோரி ஊராட்சி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

விருதுநகர், ஜூன் 25: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில், ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் திருமலை தலைமையில், சிஐடியு மாவட்ட நிர்வாகி தேவா, பாலசுப்பிரமணியன் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், ‘ஊராட்சி மன்றங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். உள்ளாட்சிகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஊராட்சி தொழிலாளர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும்.

 

ஆப்ரேட்டர்களுக்கு அறிவிக்கப்பட்ட ரூ.1,400 ஊதிய உயர்வை அமுல்படுத்த வேண்டும். தூய்மை காவலர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கி ஊராட்சிகள் மூலம் நேரடியாக சம்பளம் வழங்க வேண்டும். பணி ஓய்வு பெற்றும் ஆப்ரேட்டர்கள், தூய்மை காவலர்களுக்கு பணிக்கொடை, ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஊராட்சி தொழிலாளர்கள் அனைவருக்கும் 7வது ஊதியக்குழு ஊதிய நிலுவைத்தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

Related Stories: