2021ம் ஆண்டு தேர்வில் பல்கலை தரவரிசையில் இடம்பிடித்த எஸ்பிகே கல்லூரி மாணவ, மாணவியர்

அருப்புக்கோட்டை, ஜூன் 25: மதுரை காமராஜர் பல்கலைக்கழக அளவிலான 2021 ஏப்ரலில் நடந்த தேர்வில், அருப்புக்கோட்டை எஸ்பிகே கல்லூரி மாணவ, மாணவியர் பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் இடம்பிடித்தனர். இதன்படி, கல்லூரியில் படிக்கும் பிஎஸ்சி வேதியியல்துறை மாணவர் துளசிராம் முதலாம் இடத்தையும், பிஎஸ்சி விலங்கியல்துறை மாணவி ஆனந்தஜோதிகா முதலாம் இடத்தையும் பெற்றனர். இதேபோல, பிஎஸ்சி தகவல் தொழிற்நுட்பவியல் துறை மாணவி சித்ரா முதலிடம், எம்எஸ்சி கணிதவியல்துறை  மாணவி மகாலட்சுமி முதலிடம், எம்எஸ்சி விலங்கியியல் துறை மாணவி ரைகனா பர்வீன் முதலிடம், பி.ஏ ஆங்கிலத்துறை மாணவி பாலசரஸ்வதி இரண்டாம் இடம், பிஎஸ்சி கணிதவியல்துறை மாணவி கஜப்பிரியா இரண்டாம் இடம், பிஎஸ்சி வேதியியல்துறை மாணவி சுஜிதா சாருமதி இரண்டாம் இடம், எம்எஸ்சி கணிதவியல் துறை மாணவி பிரியதர்ஷினி இரண்டாம் இடம், எம்எஸ்சி விலங்கியியல்துறை மாணவி சுபா இரண்டாம் இடம், பிஎஸ்சி விலங்கியில்துறை மாணவி அன்னலட்சுமி 3ம் இடம், எம்எஸ்சி கணிதவியல் துறை மாணவி பிரியதர்ஷினி 3ம் இடம், பிஎஸ்சி கணிதவியல்துறை மாணவி சங்கரேஸ்வரி 4ம் இடம், பிஎஸ்சி விலங்கியியல்துறை மாணவி அஜிதா 4ம் இடம், பி.ஏ வரலாற்று துறை மாணவி இனியா 6வது இடம், பிஎஸ்சி வேதியியல்துறை மாணவி முத்துமாரி 6ம் இடம், தமிழ் முதல் பாகம் படிக்கும் சங்கரேஸ்வரி 7ம் இடம், பிஎஸ்சி வேதியியல்துறை மாணவி தனலட்சுமி 7ம் இடம், பி.காம் வணிக கணினி பொறியியல் துறை மாணவி விக்னேஸ்வரி 7ம் இடம், பிஎஸ்சி கணிதவியல்துறை மாணவி சுஸ்மா பிரியதர்ஷினி 8ம் இடம், பிஎஸ்சி கணிதவியல்துறை மாணவி தஹஜது நிஷா 9ம் இடம், தமிழ் முதல்பாகம் படிக்கும் துளசிராம் 10ம் இடம், ஆங்கிலம் 2ம் பாகம் படிக்கும் தஹஜது நிஷா 10ம் இடம், பி.காம் வணிகவியல்துறை மாணவி மதுமிதா 10ம் இடம் என தரவரிசையில் இடம் பெற்றுள்ளனர். பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் இடம் பிடித்த மாணவ, மாணவிகளை அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை தலைவர் சுதாகர், கல்லூரி செயலாளர் சங்கரசேகரன், கல்லூரி முதல்வர் முத்துச்செல்வன் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள், கல்லூரி ஆசிரியர்கள் பாராட்டினர்.

Related Stories: