கலசலிங்கம் பல்கலையில் பாதுகாப்பு

திரு வில்லிபுத்தூர், ஜூன் 25: திருவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலைக்கழக மையத்தில், சப்இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு இன்று நடக்கிறது. இதில், 3,000 பேர் தேர்வு எழுதுகின்றனர். இதையொட்டி, கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் டிஎஸ்பி சபரிநாதன் தலைமையில் சுமார் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். தேர்வு நடைபெறும் அனைத்து அறைகளிலும், கேமரா பொருத்தப்பட்டு தேர்வு எழுதுபவர்கள் கண்காணிக்கப்பட உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட எஸ்பி மனோகரன் உத்தரவின்பேரில், திருவில்லிபுத்தூர் டிஎஸ்பி சபரிநாதன், கிருஷ்ணன்கோவில் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகியோர் தலைமையில் செய்துள்ளனர்.

Related Stories: