தேனி அருகே கிணற்றில் தவறி விழுந்த சிறுத்தை மீட்பு

ஆண்டிபட்டி, ஜூன் 25:தேனி அருகே பூதிப்புரத்தில் சன்னாசியப்பர் கோயில் அருகே மரக்காமலை மலையடிவாரத்தில் தனியார் விவசாய தோட்டம் உள்ளது.  இந்த தோட்டத்தில் உள்ள கிணற்றில் சிறுத்தை தவறி விழுந்ததாக தேனி தீயணைப்பு துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட நிர்வாகத்தினரும், தீயணைப்புத் துறையினரும் சிறுத்தையை மீட்பதற்கான பணியில் இறங்கினர். தீயணைப்பு துறையினர் கயிறு மற்றும் வலைகளை வைத்து கிணற்றில் விழுந்து சிறுத்தையை மீட்டு தேனி வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் சிறுத்தையை மரக்காமலை வனப்பகுதியில் விட்டனர்.

முன்னதாக வனத்துறையினர் சிறுத்தைக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். கிணற்றில் விழுந்த சிறுத்தைக்கு சுமார் ஒன்றரை வயது இருக்கும். வனப்பகுதியில் இருந்து சிறுத்தை வழிதவறியோ ,  தண்ணீரை தேடியோ விவசாய தோட்டத்திற்கு வந்து இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர். மேலும் பூதிப்புரம் தோட்ட பகுதிக்கு சிறுத்தை வந்ததில் கிணற்றில் தவறி விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: