1.5 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது

மூணாறு, ஜூன் 25: மூணாறை அடுத்த மறையூரில் கஞ்சா கடத்த முயன்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். கேரள மாநிலம் மூணாறு மறையூர் சாலையில் உள்ள சட்ட மூணாறு வனத்துறை சோதனை சாவடியில் நேற்று முன்தினம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியே வந்த டூவீலரில் வந்த வாலிபரை மறைத்து விசாரித்தனர். விசாரணையில், அவரிடம் 1.5 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. ேமலும், விசாரித்ததில், அவர் காந்தளூர் பகுதியை சேர்ந்த ஆனந்த் (28) என்பதும் தெரிந்தது. உடனடியாக மறையூர் போலீஸார் அவரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அதன்பின், குற்றவாளியை போலீசார் தேவிகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

Related Stories: