கவியரசு கண்ணதாசன் பிறந்தநாள் விழா: அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை

காரைக்குடி, ஜூன் 25: காரைக்குடியில் கவியரசு கண்ணதாசன் மணிமண்டபத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மூலம் கவியரசு கண்ணதாசன் விழா அரசு விழாவாக கொண்டாடப்பட்டது. பிஆர்ஓ நாகராஜபூபதி வரவேற்றார். அரசு சார்பில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, கலெக்டர் மதுசூதன் ரெட்டி ஆகியோர் தலைமையில் கண்ணதாசன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

எம்.பி கார்த்தி சிதம்பரம், எம்எல்ஏ மாங்குடி, நகர்மன்றதலைவர் முத்துத்துரை, துணைத்தலைவர் குணசேகரன், தேவகோட்டை கோட்டாட்சியர் பிரபாகரன், வட்டாட்சியர் மாணிக்கவாசகம், ஒன்றிய செயலாளர் டாக்டர் ஆனந்த், முன்னாள் இளைஞரணி துணை அமைப்பாளர் பள்ளத்தூர் கேஎஸ்.ரவி, அரசு வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன், மாவட்ட பிரதிநிதி ஜான்கென்னடி, நகர துணைச்செயலாளர்கள் கண்ணன், லெட்சுமிராஜ்கணேஷ், கண்ணதாசன் புதல்வி விசாலாட்சி கண்ணதாசன், கவிஞர் அருநாகப்பன், முன்னாள் நகர இளைஞரணி அமைப்பாளர் காரைசுரேஷ், காங்கிரஸ் நகர தலைவர் பாண்டிமெய்யப்பன், நகர செயலாளர் குமரேசன், முன்னாள் மாவட்ட தலைவர் ராஜரத்தினம், நிர்வாகிகள் ரமேஷ், கதிரவன், நாடகநடிகர்கள் சங்கம் சார்பில் கொந்தமங்கலம் காந்தி மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: