போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

திருப்பூர், ஜூன் 25: கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த 33 வயது வாலிபர். இவர் திருப்பூர் புது காட்டில் தங்கி இருந்து பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் திருப்பூரைச் சேர்ந்த 19 வயது பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.அதனால் அவர்கள் இருவரும் பாதுகாப்பு கேட்டு தெற்கு போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதனை தொடர்ந்து போலீசார் 2 வீட்டாரின் பெற்றோரையும் அழைத்து பேசி மணமக்களை அனுப்பி வைத்தனர். போலீஸ் நிலையம் முன் இரு வீட்டு பெற்றோரும் இடையே திடீர் தகராறு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: