திருப்பூரில் ஜவுளிக்கடை உரிமையாளரின் வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகை, ரூ.1.50 லட்சம் திருட்டு

திருப்பூர், ஜூன் 25:திருப்பூர் ஏபிடி ரோடு பகுதியில் வசித்து வருபவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த அமர்சிங் (54). இவர் அதே பகுதியில் ஜவுளி கடை நடத்தி வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் காலை கேரளாவிற்கு சென்றுள்ளார்.‌  நேற்று மாலை மீண்டும் வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனை தொடர்ந்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோ கதவு உடைக்கப்பட்டு 18 பவுன் நகை மற்றும் 1.50 லட்சம் ரூபாய் ரொக்க பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து அமர்சிங் மத்திய காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: