ஒர்க்‌ஷாப் ஊழியர் உட்பட 2 பேர் தற்கொலை

கோவை, ஜூன் 25:  கோவை கணபதி கட்டபொம்மன் தெருவை சேர்ந்தவர் அழகிரிசாமி (70). இவர், உயர் ரத்த அழுத்த நோயால் அவதிப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனால், ஏற்பட்ட மன உளைச்சலில் வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர், சம்பவத்தன்று இரவு வீட்டில் விஷம் குடித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக, சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கோவை பீளமேடு காந்தி மாநகரை சேர்ந்தவர் பாலமுருகன் (43). ஒர்க்‌ஷாப் ஊழியர். குடிப்பழக்கம் உடைய இவர், கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டு குளியலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த போலீசார், உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: