தொழிற்சாலையில் ரூ.52 ஆயிரம் திருடிய ஊழியர் கைது

கோவை, ஜூன் 25:  கோவை அடுத்த கருமத்தம்பட்டி கிட்டாம்பாளையத்தில் தனியார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு செந்தில் பிரபு (44) என்பவர் கணக்காளராக உள்ளார். இவர் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில், ‘‘நான் மில்லில் சம்பவத்தன்று கணக்கு, வழக்குகளை சரிபார்த்துவிட்டு ரூ. 52 ஆயிரத்தை அலுவலக மேஜை டிராயரில் வைத்துவிட்டு சென்றேன். மறுநாள் வேலைக்கு வந்தபோது பணம் திருடு போயிருந்தது. அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது மில்லில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் வேலூர் சுத்துவாச்சேரியை சேர்ந்த சுரேஷ் (24) பணத்தை திருடியது தெரியவந்தது. அவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தரவேண்டும்’’ என தெரிவித்திருந்தார். புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், சுரேஷ் பணத்தை திருடியது உறுதியானது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து ரூ. 52 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: