அளவுக்கு அதிமாக மது குடித்தவர் பலி

ஈரோடு, ஜூன் 25:  ஈரோடு, கருங்கல்பாளையம், கமலா நகரை சேர்த்தவர் மூர்த்தி (38). இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மூர்த்தியை விட்டு பிரிந்து அவரது மனைவி குழந்தையுடன் தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் மன வருத்தத்தில் இருந்த மூர்த்தி குடிப்பழக்கத்திற்கு அடிமையானார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் ஜெயகோபால் தெருவில் உள்ள ஒரு டாஸ்மாக் கடை அருகே அதிக மதுபோதையில் பேச்சு மூச்சு இல்லாமல் மயங்கி கிடந்த மூர்த்தியை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இது கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: