வாய்க்காலில் டிராக்டர் கவிழ்ந்தது

பவானி, ஜூன் 25: அந்தியூர் அருகேயுள்ள பச்சாம்பாளையம் பகுதியிலிருந்து சிமெண்ட் கற்களை ஏற்றிக் கொண்டு ஒரு டிராக்டர் ஊமாரெட்டியூர் - அம்மாபேபேட்டை ரோட்டில் நேற்று சென்ற போது மேட்டூர் மேற்குக்கரை வாய்க்கால் பகுதியில்  டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் வாய்க்காலில் தலைகுப்புறக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில், டிரைவர் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இதைத் தொடர்ந்து, ராட்சத கிரேன் வரவழைக்கப்பட்டு, டிராக்டர் மீட்கப்பட்டது. இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

Related Stories: